தமிழ்நாடு கடைகளுக்கான GST பில்லிங்

கையால பில் எழுதுனது போதும்.
டிஜிட்டல் GST பில் போடுங்க!

பில்லிங், பாக்கி கணக்கு, GST கணக்கு – எல்லாமே ஒரே சாப்ட்வேர்ல. மாசக் கடைசில டென்ஷனே இல்ல, ஏன்னா GST டேட்டா முன்னாடியே ரெடி.

ஆன்லைன் பிளான் – ஆரம்ப விலை₹149/மாதம்
  • ஆஃப்லைன் லைஃப்டைம் லைசென்ஸ் இல்லனா ஆன்லைன் மாசச் சந்தா
  • ஃப்ரீ டெமோல நேரடியா காட்டுவோம்
  • தமிழ்லயே கால் / WhatsApp சப்போர்ட்

30 செகண்ட்ல பதிவு பண்ணலாம். டெமோ டைம் முடிவு பண்ண நாங்களே கூப்பிடுவோம்.

✔ GST இன்வாய்ஸ் (CGST / SGST / IGST) ✔ ஆஃப்லைன் லைஃப்டைம் / ஆன்லைன் மாசச் சந்தா ✔ தெர்மல் & A4 பிரிண்ட் ✔ கஸ்டமர் பாக்கி லெட்ஜர்

உங்க கடைல இப்படி நடக்குதா?

✍️

கையால பில் எழுதுனா – நேரம் போகுது

கஸ்டமர் லைன்ல நிக்கிறாங்க, நீங்க கையால கூட்டிட்டு இருக்கீங்க. கணக்கு தப்பா போச்சுன்னா நஷ்டம் உங்களுக்குத்தான்.

😰

மாசக் கடைசில GST டென்ஷன்

பில் புக்கையெல்லாம் அடுக்கி CA-கிட்ட கொடுக்கணும். பில் காணோம், நோட்டீஸ் வந்துடுமோன்னு பயம்.

📦

பாக்கி கணக்கு நோட்டுல காணாம போகுது

யார் எவ்வளவு பாக்கி, யார் எப்ப கொடுத்தாங்க – எல்லாமே நோட்டுலயும் மனசுலயும். காசு மறந்தே போயிடுது.

Rabtoise Billing-ல உங்களுக்கு என்ன கிடைக்கும்?

சின்னக் கடைகளுக்காகவே பண்ணது. WhatsApp use பண்ணத் தெரிஞ்சா இதுவும் ஈஸிதான்.

⚡

செகண்ட்ல பில்

கஸ்டமரை செலக்ட் பண்ணி, பொருளை சேர்த்தா போதும். டோட்டல், வரி, ரவுண்ட்-ஆஃப் எல்லாம் தானா வந்துடும். ஃபாஸ்ட் POS ஸ்கிரீனும் இருக்கு.

🧾

கரெக்ட்டான GST இன்வாய்ஸ்

GSTIN, CGST, SGST, IGST-யோட ப்ரொஃபஷனல் இன்வாய்ஸ். A4-லயும் தெர்மல் ரோல்லயும் பிரிண்ட் எடுக்கலாம்.

📊

கேஷ், கார்டு, UPI, கடன் – எல்லாமே கணக்குல

ஒரே பில்லை கேஷ், கார்டு, UPI, கடன்னு பிரிச்சு போடலாம். பாக்கி காசு வரும்போது என்ட்ரி போடுங்க; ஹோம் ஸ்கிரீன்லயே பாக்கி தெரியும்.

🖨️

உங்க ஸ்டைல்ல பிரிண்ட்

தெர்மல் ரசீது இல்லனா A4 இன்வாய்ஸ் – உங்க கடை பேரு, விவரத்தோட; பிரிண்ட் பண்றதுக்கு முன்னாடி ப்ரிவ்யூ பார்க்கலாம்.

📒

பாக்கி (கடன்) கணக்கு

யார் உங்களுக்கு எவ்வளவு தரணும், நீங்க யாருக்கு எவ்வளவு தரணும் – லெட்ஜர்ல தெளிவா தெரியும்.

🔒

உங்க டேட்டா உங்ககிட்டயே

ஆஃப்லைன் பிளான்ல டேட்டா உங்க கம்ப்யூட்டர்லயே இருக்கும்; இன்டர்நெட் போனாலும் பில்லிங் நிக்காது. ஸ்டாஃப்புக்கு தனி லாகின், ரோல்ஸ்.

மாசக் கடைசி – டென்ஷன் இல்ல

20-ம் தேதி வரைக்கும் வெயிட் பண்ணாதீங்க, தினமும் GST டேட்டா ரெடி

நீங்க போடுற ஒவ்வொரு பில்லும் வரி பிரிச்சு சேவ் ஆகிடும். மாசக் கடைசில ரிப்போர்ட் எடுத்து CA-க்கு அனுப்புங்க. அவ்வளவுதான்.

  • சேல்ஸ் ரிப்போர்ட் – taxable தொகை, CGST, SGST, IGST
  • B2B (GSTIN உள்ள) & B2C பில் தனித்தனியா
  • HSN வாரியா ரிப்போர்ட் – வரி விகிதம், பில்களோட
  • கணக்கு பாக்குறவருக்கு Excel-ல எடுத்து கொடுக்கலாம்
ஃப்ரீ டெமோல பாருங்க

எப்படி ஆரம்பிக்கிறது? – 3 ஈஸி ஸ்டெப்

1

ஃப்ரீ டெமோ புக் பண்ணுங்க

கீழ இருக்கிற சின்ன ஃபார்ம்ல விவரம் கொடுங்க. நாங்க தமிழ்லயே கூப்பிடுவோம்.

2

உங்க கடைக்கு ஏத்த மாதிரி காட்டுவோம்

உங்க கடை பொருள், பில்லை வச்சே லைவ் டெமோ. என்ன வேணும்னாலும் கேளுங்க.

3

பில்லிங் ஆரம்பிங்க

செட்டப், கஸ்டமர் லிஸ்ட் இம்போர்ட் எல்லாத்துக்கும் நாங்க ஹெல்ப் பண்ணுவோம். அதே நாள்ல முதல் டிஜிட்டல் பில்.

உங்கள மாதிரி கடைகளுக்காக

மளிகைக் கடைசூப்பர் மார்க்கெட்பேக்கரி & ஸ்வீட் கடைஹார்டுவேர் கடைஎலக்ட்ரிக்கல் கடைமொபைல் & அக்சஸரீஸ்ஜவுளி & ரெடிமேட்ஸ்டேஷனரிமொத்த வியாபாரம்

2 பிளான் இருக்கு – உங்க கடைக்கு எது செட் ஆகுதோ அத எடுங்க

ஒரு தடவ காசு கொடுத்து வாழ்நாள் முழுக்க வச்சுக்கலாம், இல்லனா மாசம் கொஞ்சம் கட்டி ஆரம்பிக்கலாம்.

ஆன்லைன் · மாசச் சந்தா

ஆன்லைன் சப்ஸ்கிரிப்ஷன்

₹149/மாதம்
ஆரம்ப விலை · நாளைக்கு ₹5 தான்
  • பெரிய செலவு இல்ல – மாசம் கொஞ்சம் தான்
  • use பண்ற மாசத்துக்கு மட்டும் கட்டினா போதும்
  • use பண்ண இன்டர்நெட் வேணும்
  • செட்டப் ஹெல்ப் & தமிழ் சப்போர்ட்
டெமோ புக் பண்ணுங்க – ஆன்லைன் பிளான்
ஆஃப்லைன் · ஒரு தடவ கட்டணம்

ஆஃப்லைன் சாப்ட்வேர் – லைஃப்டைம் லைசென்ஸ்

ஒரு தடவ கட்டணம்
மாசக் கட்டணம் இல்ல · விலை டெமோல சொல்றோம்
  • உங்க கம்ப்யூட்டர்ல இன்ஸ்டால் – வாழ்நாள் முழுக்க உங்களுக்குத்தான்
  • லைஃப்டைம் லைசென்ஸ் – மாசம் / வருஷம் ரினியூவல் இல்ல
  • இன்டர்நெட் போனாலும் பில்லிங் நிக்காது
  • டேட்டா உங்க கம்ப்யூட்டர்லயே
  • நாங்களே இன்ஸ்டால் பண்ணி செட்டப் பண்ணி தருவோம்
டெமோ புக் பண்ணுங்க – லைஃப்டைம் பிளான்

ரெண்டு பிளான்லயும் இருக்கிறது

  • GST & non-GST பில்கள் (CGST / SGST / IGST)
  • ஃபாஸ்ட் பில்லிங் + POS ஸ்கிரீன்
  • கஸ்டமர், சப்ளையர் விவரம், பாக்கி லெட்ஜர்
  • சேல்ஸ், HSN ரிப்போர்ட், கஸ்டமர் ஹிஸ்டரி (Excel)
  • தெர்மல் & A4 பிரிண்ட்
  • ஸ்டாஃப் லாகின், ரோல்ஸ்

எந்த பிளான் எடுக்கணும்னு தெரியலையா? டெமோ புக் பண்ணுங்க – உங்க கடைக்கு எது சரின்னு நாங்க சொல்றோம்.

அடிக்கடி கேக்குற கேள்விகள்

எனக்கு கம்ப்யூட்டரே தெரியாது. use பண்ண முடியுமா?

முடியும். ஸ்கிரீன் எல்லாம் ரொம்ப சிம்பிள்; உங்க ஸ்டாஃப் 10 நிமிஷத்துல கத்துக்கலாம். செட்டப் பண்ணும்போதே நாங்க டிரெயினிங் தருவோம்.

ஏன் டெமோ? நேரா டவுன்லோட் பண்ணிக்க முடியாதா?

ஒவ்வொரு கடையும் வேற வேற. டெமோல உங்க கடைக்கும் வரி விகிதத்துக்கும் ஏத்த மாதிரி செட் பண்ணி காட்டுவோம்; முதல் நாள்ல இருந்தே கரெக்ட்டா வேலை செய்யும்.

இன்டர்நெட் வேண்டுமா?

ஆஃப்லைன் லைஃப்டைம் சாப்ட்வேருக்கு இன்டர்நெட் வேணாம்; டேட்டா உங்க கம்ப்யூட்டர்லயே சேவ் ஆகும். ஆன்லைன் மாசச் சந்தா பிளானுக்கு இன்டர்நெட் வேணும்.

'லைஃப்டைம் லைசென்ஸ்'னா என்ன?

ஒரு தடவ காசு கட்டிட்டா, இன்ஸ்டால் பண்ண சாப்ட்வேரை மாசம் / வருஷம் எதுவும் கட்டாம தொடர்ந்து use பண்ணலாம்.

ஆஃப்லைனா ஆன்லைனா – எனக்கு எது சரி?

ஒரு தடவ காசு கொடுத்து டேட்டாவை சொந்த கம்ப்யூட்டர்ல வச்சுக்கணும்னா ஆஃப்லைன்; மாசம் கொஞ்சம் கட்டி ஆரம்பிக்கணும்னா ஆன்லைன். டெமோல நாங்க சொல்றோம்.

என்னோட பழைய கஸ்டமர் லிஸ்ட்டை மாத்த முடியுமா?

முடியும். கஸ்டமர், சப்ளையர் விவரத்தை Excel-ல இருந்து இம்போர்ட் பண்ணிக்கலாம்.

இதுவே GST ரிட்டர்ன் ஃபைல் பண்ணிடுமா?

இல்ல. உங்க பில், வரி டேட்டாவை கிளீனா ரெடியா வச்சிருக்கும்; நீங்களோ உங்க CA-வோ சீக்கிரமா, தப்பில்லாம ஃபைல் பண்ணிடலாம்.

எந்த பிரிண்டர் வேலை செய்யும்?

USB தெர்மல் பிரிண்டர், சாதாரண A4 பிரிண்டர் ரெண்டுமே வேலை செய்யும். உங்க பிரிண்டரை டெமோல செக் பண்ணிக்கலாம்.

உங்க ஃப்ரீ டெமோவை புக் பண்ணுங்க

பேரும் மொபைல் நம்பரும் கொடுங்க. உங்க பில், பாக்கி கணக்கு, GST டேட்டா எப்படி இருக்கும்னு காட்ட நாங்க கூப்பிடுவோம்.

  • ஃப்ரீ – கட்டாயம் ஒண்ணும் இல்ல
  • 15–20 நிமிஷம் டெமோ தான்
  • தமிழ்லயே, கால் இல்லனா வீடியோல
உங்க நம்பரை டெமோவுக்கு பேசுறதுக்கு மட்டும்தான் use பண்ணுவோம்.
📞 கால் WhatsApp ஃப்ரீ டெமோ